நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட 8 வயது சிறுவன் சடலமாக மீட்பு!!

621

1445530264Childகம்பளை, அட்டபாகே, அட்டபாககந்த பிரதேசத்தில் வசிக்க கூடிய பாடசாலை செல்லும் 08 வயது மாணவர் ஒருவர் நீரோடையில் அடித்து செல்லப்பட்ட நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தந்தையுடன் இரவு நேரம் வெளியில் சென்ற குறித்த மாணவன், வீடு திரும்பும்போது, தகப்பன் கூறியதை கேட்காமல் நீரோடை ஒன்றை கடக்க முயற்சித்த போது தவறி விழுந்ததுள்ளான்.

தொடர்ந்து பெய்து வரும் கடும்மழை காரணமாக நீரோடையில் காணப்பட்ட நீரில் அடித்துச் செல்லப்ட்ட சிறுவன் இரவு முழுவதும் தேடிய போதும் கிடைக்காத நிலையில் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளன்.

பொலிசார் மற்றும் பொது மக்கள் இணைந்து தேடியதில், நீரோடையில் விழுந்த இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திற்க்கு அப்பால் சிறுவன் சடலமாக மீட்டுள்ளனர்.

குறித்த மாணவன் தரம் 3 இல் இகலகம வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகின்றான் என்பது குறிப்பிடத்தக்கது.