குவாத்தமாலாவில் கொலை செய்ய மறுத்த 12 வயது சிறுவனை 450 அடி உயரத்தில் உள்ள கட்டிடத்தில் இருந்து தள்ளி விட்டு கொலைகார கும்பல் ஒன்று பழி தீர்த்துள்ளது.மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாத்தமாலாவில் பாடசாலையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தான் 12 வயதான ஏஞ்சல் அரியல் பேரிஸ்.
அப்போது மறைந்திருந்த கொலைகார கும்பல் ஒன்று சிறுவன் பேரிஸ் ஐ பிடித்து மிரட்டி, அப்பகுதியில் பேருந்து ஓட்டுனர் ஒருவரை கொலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவன் பேரிஸ் ஐ தண்டிக்கும் பொருட்டு அவனுக்கு இரண்டு வாய்ப்புகளை அந்த கும்பல் வழங்கியுள்ளது.
அதில் மத்திய அமெரிக்கா பகுதிகளில் பயன்படுத்தும் Machete எனப்படும் அகலக்கத்தியால் மரணமடைவது, அல்லது உயரமான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வது.
Perez பாலத்தில் இருந்து குதித்து சாவதை விரும்புவதாக தெரிவிக்கவே, அந்த கும்பல் அவனை 450 அடி உயரம் கொண்ட ஒரு பகுதிக்கு இட்டுச்சென்று அங்கிருந்து தள்ளி விட்டுள்ளது.
பாடசாலை விட்டு திரும்பிய மகனை காணவில்லை என தேடி அலைந்த அவனது தந்தை Luis Escalante மீட்பு படையினரின் உதவியால் மூன்று நாட்கள் கடந்து கண்டு பிடித்தனர். உயரமான அமைப்பில் இருந்து குதித்த சிறுவன் பேரிஸ்அங்கிருந்த மரக்கிளைகளில் சிக்கி படுகாயமுற்று புதரின் நடுவே விழுந்து கிடந்துள்ளான்.
மீட்பு படையினருடன் வந்து சிறுவனை மீட்ட Luis குற்றுயிராக கிடந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் Perez 15 நாட்கள் கடந்து உயிரிழந்துள்ளான். இந்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.