மாத்திரைகள் தொண்டையில் சிக்கி சிறுமி பலி!!

631

Tab

மிஹிந்தலை பகுதியில் மாத்திரைகள் தொண்டையில் சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்றரை வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுகயீனம் காரணமாக குறித்த சிறுமியை அவரது தந்தை நேற்று காலை மிஹிந்தலை பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வைத்தியர் வழங்கிய அறிவுரையின் படி மருந்துகளை சிறுமிக்கு வழங்கியுள்ளனர்.



இதனையடுத்து தொண்டையில் மருந்து சிக்கியதில் மூச்சுவிட ஏற்பட்ட சிரமம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.