வவுனியாவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவருக்கு த.தே.ம.முன்னணி வாழ்வாதார உதவி!!

1639

unnamed

கடந்த 2009 ற்கு முன்னரான காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது காயமடைந்து முள்ளந்தண்டு பாதிப்பிற்கு உள்ளாகி இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்த நிலையில் வாழும் இளைஞர் ஒருவருக்கு மூன்று லட்சம் (300 000) ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரான்சில் உள்ள தமிழ்ச்சோலைப் பள்ளி நிர்வாகத்தினால் அனுப்பப்பட்ட நிதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட செயலாளர் கோபாலகிருஸ்ணன் அவர்களால் 17.10.2015 அன்று குறித்த இளைஞரிடம் கையளிக்கப்பட்டது.

யுத்தத்தின் பின்னர் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழ்ந்துவரும் அவருக்கு முதற்கட்டமாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.