புகழ்பெற்ற கார் நிறுவனம் சுமார் 65 லட்சம் கார்களை திரும்பப் பெறுகின்றது!!

542

Toyota

உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 65 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக புகழ் பெற்ற கார் நிறுவனமான டொயோட்டா அறிவித்துள்ளது.

டொயோட்டா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள சுமார் 65 லட்சம் கார்களில் உள்ள பவர் விண்டோ சுவிட்ச்கள் தேவைக்கும் அதிகமாக சூடாகி அதன் காரணமாக உருகவும் தீ பற்றவும் வாய்ப்பு உள்ளதால், அவற்றை திரும்ப பெற்று, குறைபாட்டை சரி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

பவர் விண்டோ சுவிட்ச்கள் தொடர்பாக இதுவரை 11 புகார்கள் வந்துள்ளதாகவும், அமெரிக்காவில் இருந்து மட்டும் 7 புகார்கள் வந்துள்ளதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.