ரியோ ஒலிம்பிக் : 8 மணி நேரத்தில் 240,000 டிக்கெட்டுகள் விற்பனை!!

382

RIO

\பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 மணி நேரத்திற்குள் 240,000டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கால்பந்து, கூடைப்பந்து, வொலிபால் உள்ளிட்ட போட்டிகளுக்கான டிக்கெட் வாங்குவதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதால் முதல் ஒரு மணி நேரத்தில் மட்டும் 120,000 டிக்கெட்டுகள் விற்பனை ஆகின.

மூன்றாம் கட்ட டிக்கெட் விற்பனையில், முதலில் வருவோருக்கு முதல் முன்னுரிமை என்ற அடிப்படையில் உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 20 லட்சம் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரேசில் அல்லாதவர்களுக்கு தங்கள் நாட்டில் உள்ள மறுவிற்பனையாளர்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்க முடியும்.



தென் அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற உள்ள இந்த ஒலிம்பிக் போட்டி ஓகஸ்ட் 5 ஆம் திகதி தொடங்கி 21 ஆம் திகதி நிறைவடைகிறது.