தந்தையைக் கொன்று புதைத்த மகன் கைது!!

460

Arrest1

கலவான – தேல்கோட பகுதியில் தனது தந்தையை கொன்று புதைத்ததாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சகோதரரால் கலவான பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 3ம் திகதி தந்தையைக் கொன்று வீட்டுக்கு பின்னால் புதைத்துள்ளதாக தனது சகோதரரிடம் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.



தந்தை குடித்து விட்டு மோதலில் ஈடுபட்டமையே இந்த கொலைக்கு காரணம் என சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கலவான பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொல்லப்பட்டவரின் சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.