வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் முன் நடனமாடிய மருத்துவர்கள்!!(வீடியோ)

565

Dance

இந்தியாவின் குஜராத் மாநில அரச மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் முன்னிலையில் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நோயாளிகள் படுக்கையில் இருக்க, அவர்களைச் சுற்றி சுவர்களில் வர்ண பலூன்கள் கட்டி, மருத்துவர்களும் தாதியர்களும் மகிழ்ச்சியோடு நடனமாடியுள்ளார்கள்.

அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நிதின்பாய் படேல், வைத்தியசாலையின் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து விட்டு சென்ற சில மணி நேரத்தில் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் நடனத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ கண்காணிப்பாளர்,

விழாவின் போது ஆடல், பாடலுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும், இந்த செய்தி கேட்டவுடன் உடனே ஆடல் பாடலை தடுத்து நிறுத்தியதாகவும், இதில் ஈடுபட்டவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.