கொட்டபொல, கிரிவான ஓய ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள சிறுமின்னுற்பத்தி நிலையமொன்றின் பாதுகாப்பு ஊழியர்கள் இரண்டுபேர் கூரைமீதேறி போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மின்னுற்பத்தி நிலையம் தற்போது ஜப்பான் நிறுவனமொன்றுக்கு கைமாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குறித்த பாதுகாப்பு ஊழியர்களின் பணி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக பாதுகாப்பு ஊழியர்கள் இருவரும் மின்னுற்பத்தி நிலையக் கூரை மீதேறி போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்கள். தங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே போராட்டக்காரர்களின் மனைவிமார் கூட அவர்களைச் சந்திக்க விடாது தடுத்துள்ள நிர்வாகம், சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.