போர்ச்சுக்கல் நாட்டு விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர் மது போதையில் ஆடைகளை களைந்து விட்டு, விமானப் பணிப் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
சன் எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஒன்று போர்ச்சுகல் நாட்டின் டப்ளின் விமான நிலையத்தில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்டது. விமானம் நடுவானில் பறக்கத் தொடங்கியதும், அதில் இருந்த பயணி ஒருவர் மது போதையில் ரகளை செய்ய ஆரம்பித்து விட்டார். யாரும் எதிர்பார்க்காத நிலையில், தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமான அப்பயணி, விமானப் பணிப்பெண் ஒருவரிடமும் தகாத முறையில் நடக்கத் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாக பெல்கிரேடில் தரையிறக்கப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணையில், ரகளை செய்த நபர் அயர்லாந்து நாட்டுக்காரர் எனத் தெரிய வந்தது.