இனி காளான் மூலம் செல்போன்களை சார்ஜ் செய்யலாம்!!

638

_For-cellphone-Mushrooms-will-be-charged_SECVPFஒரு­புறம் சூரிய ஆற்­ற­லி­லி­ருந்து மின்­னுற்­பத்தி செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக நடந்து கொண்­டி­ருந்­தாலும், முடிந்தளவு மின்-­க­ழி­வு­களை வெளி­யி­டாத மின்­சார மூலங்­களைத் தேடித் தேடி ஆய்வு செய்து வரு­கின்­றனர் ஆய்­வா­ளர்கள்.

அப்­ப­டிப்­பட்ட ஓர் ஆய்வின் விளை­வுதான் இந்தக் காளான் பெட்­ட­ரிகள். அமெ­ரிக்­கா­வி­லுள்ள கரோ­லினா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மாணவர் குழு மாற்று மின்­னுற்­பத்தி என்ற தளத்தில் மேற்­கொண்ட ஆராய்ச்­சியில், ’போர்­ட­பெல்லோ’ எனப்­படும் குறிப்­பிட்ட வகைக் காளான்­களைக் கொண்டு மின்­க­லங்­களை, அதா­வது பேட்­ட­ரி­களை, மின்­னூட்டம் செய்ய முடியும் என்று கண்­ட­றிந்­துள்­ளது.

இது குறித்துப் பேட்­டி­ய­ளித்த, அவ்­விஞ்­ஞானக் குழுவின் தலைமை விஞ்­ஞா­னி­யான ப்ரென்னன் கேம்ப்பெல், “இன்று நாம் பயன்­ப­டுத்தும் மின்­க­லங்கள் பெரும்­பாலும் லித்­தியம் அய­னி­களைக் கொண்டே உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.இந்த லித்­தியம் மின்­க­லங்­களை மின்­னூட்டம் செய்­வ­தற்கு கரியின் உலோகக் கல­வை­யான ‘க்ராஃபைட்’ அதி­க­மாகத் தேவைப்­ப­டு­கி­றது. இந்த க்ராஃபட்டைத் தயா­ரிக்க அதிக செலவு ஏற்­ப­டு­வ­தோ­டல்­லாமல் இதன் கழி­வுகள் சுற்­றுப்­பு­றத்தைப் பெரிதும் மாசு­ப­டுத்­து­கின்­றன. அது மட்­டு­மன்றி, இந்த லித்­தி­ய -­மின்­க­லங்­களைச் சுத்­தி­க­ரிக்க ‘ஹைட்­ரோஃப்­ளூரிக் ஆசிட்’ எனப்­படும் அடர்­தி­ரவம் தேவை­யா­கி­றது. இந்த திரவம் புறச்­சூ­ழ­லுக்குத் தீங்கு விளை­விக்கும் அமிலக் கழி­வாகும். என­வேதான் இந்த மாற்று மின்­கல முயற்­சியை மேற்­கொண்டோம்” என்­கிறார்

தொடர்ந்து, இந்தக் காளான் பேட்­ட­ரியின் இயக்கம் குறித்துத் தெளி­வு­றுத்­து­கின்­றனர் ஆய்­வுக்­கு­ழு­வினர். ’அகா­ரிக்கஸ் பைஸ்­போரஸ்’ எனப்­படும் இந்தக் குறிப்­பிட்ட வகைக் காளானில் ’ஸ்போர்ஸ்’ எனப்­படும் நுண்­து­ளைகள் மிக அதிகம்.
இத்­த­கையத் துளை­களின் வழி­யாக, மின்-­தி­ர­வங்கள் எளிதில் போக்­கு­வ­ரத்து மேற்­கொள்ள முடியும் என்­பதால் இதில் மின் கடத்தல் செய்­வது மிகவும் சுலபம். மேலும் இந்­த­வகைக் காளானில் பொட்­டா­சியம் தன்மை அதி­க­மாக இருப்­பதால் இது மின்­னுற்­பத்­திக்கு மிகவும் ஏற்­ற­தொரு கல­மாகும்.



நாள்­போக்கில் இதன் மின்­னூட்­டத்தை ஊக்­கு­விப்­பது சுலபம். அதற்கு எந்­த­வித வேதி­யியல் திர­வங்­களும் தேவை­யில்லை. மேலும் இயற்­கை­யா­கவே உக்­கி­விடும் பொரு­ளென்­பதால் சுற்­றுப்­பு­றத்­திற்கு எந்­த­விதத் தீமையும் விளை­விக்­காத மின் கல­மாக இது தொடர்ந்து செயற்­படும் என்­கின்­றனர் அறி­வி­ய­லா­ளர்கள்.

தற்­போது முதற்­கட்ட உற்­பத்­தியில் இருக்கும் இந்த மின் கலங்கள், விரைவில் சந்­தைக்­கான உற்­பத்­தியை எட்டும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றதுறது. மழைநாட்களில் முளைக்கும்போதெல்லாம், தேவையற்றது என்று பிடுங்கியெறிப்படும் காளான் நம் அலைபேசியின் மின்னூட்டத்திற்கு உதவுமென்றால், இனி அவற்றைத் தேடித் தேடி வளர்ப்போம் தானே!