24.10.2015 சனிக்கிழமை அன்று ஒமந்தை மகாவித்தியாலயத்தில் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை வரவேற்க்கும் நிகழ்வு இடம்பெற்றது .
அத்துடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்திஆனந்தன் அவர்களையும் வரவேற்க்கும் நிகழ்வும் நேற்று ஒமந்தை மகாவித்தியலயத்தில் நடைபெற்றது .
மேற்படி நிகழ்வில் வடக்குமாகாண சுகாதாராஅமைச்சர் ப . சத்தியலிங்கம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன் தியாகராஜா ,இந்திரராஜா மற்றும் எம் பி நடராஜ் ஆகியோருடன் அதிபர் அசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் எனப் பலரும் கலந்து சித்தியடைந்த மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசுப்பொருட்களும் வழங்கி வைத்தனர் .