நேற்று (24.10) இரவு வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா குருமண்காட்டில் இருந்து வவுனியா நகரை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து துவிச்சகரவண்டியில் பயணித்த மாணவி மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இவ் விபத்தில் படுகாயமடைந்த இளைஞனும் மாணவியும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.