மருதானையிலிருந்து பத்தரமுல்ல வரையான புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ரயில்வே திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
மருதானையில் இருந்து தெமட்டகொடை ஊடாக பத்தரமுல்ல வரை இந்த புதிய ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு கவனம் செலுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் முதல்கட்ட நடவடிக்கையாக தெமட்டகொடை ஊடாக பத்தரமுல்ல வரை ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு உகந்த 06 தரைமார்க்க பகுதிகள் இணங்காணப்பட்டுள்ள.
அந்த 06 தரைமார்க்க பகுதிகளிலும் மிகச்சிறந்த பகுதியை தெரிவு செய்து செயலாக்க ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிடுகின்றார்.
தெமட்டகொடை ஊடாக பத்தரமுல்ல வரை 10 கிலோமீட்டர் தூரமான பாதை அமைக்கப்படவுள்ளது.