அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றில் தாக்குதல் : முகாமையாளர் பலி!!

400

Crime

அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் அந்த விடுதியின் முகாமையாளர் அலக்சாண்டர் விக்ரமத சொய்சா உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 பேர் வரை சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த குறித்த நபருக்கு சொந்தமான இந்த இரவு விடுதி, அந்தப் பிரதேசத்தில் பிரபலமானது என்பதுடன் அந்த இரவு விடுதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு ஒன்றும் விசாரணையில் உள்ளது.

நேற்றிரவு 11.15 மணியளவில் உள் நுழைந்த 20 பேரைக் கொண்ட ஒரு கும்பல், அவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.



சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் மூவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ள ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.