இந்திய அணியை பந்தாடிய தென்னாபிரிக்கா 6 ஓட்டங்களால் சாதனையை தவறவிட்டது!!

378

SA

இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கட்டுகளை மட்டும் இழந்து 438 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் 2-2 என்று சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகின்றது..

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணித் தலைவர் டிவில்லியர்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். இதன் படி தென்னாபிரிக்கா அணி திரடியாக விளையாடி 50 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கட்டுகளை மட்டும் இழந்து 438 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



தென்னாபிரிக்க அணி சார்பாக டி கொக் 87 பந்துகளில் 109 ஓட்டங்களையும், டுப்லசிஸ் 115 பந்துகளில் 133 ஓட்டங்களையும்
அணித்தலைவர் டிவில்லியர்ஸ் 61 பந்துகளில் 119 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இன்றைய போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை தென்னாபிரிக்க அணி வீர்கள் அனைவரும் தும்சம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது.

இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணி ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்ட சாதனையை 5 ஓட்டங்களால் தவறவிட்டது. இலங்கை அணியே ஒருநாள் போட்டிகளில் 443 ஓட்டங்களை பெற்று தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.