வவுனியா தமிழ் மாமன்றத்தின் இரண்டாவது நிர்வாக சபை தெரிவு!!(படங்கள்)

486

தமிழ் மாமன்றத்தின் இரண்டாவது நிர்வாக சபையை தெரிவு செய்வதற்க்கான பொதுக்கூட்டம் நேற்று (25.10.2015) மாலை 3.30 மணிக்கு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் இடம் பெற்றது.

முதலாவது நிர்வாக சபை முழுமையாக கலைக்கப்பட்டு, புதிய இரண்டாவது நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டது.
அதனடிப்படையில்,

மேற்சபையின் தற்காலிக உறுப்பினராக முன்னாள் தலைவர் இ.இராஜேஸ்வரன் அவர்களும்,

தலைவராக சு.கிருபானந்தகுமாரன் அவர்களும்,



உபதலைவராக சு.வினோத் அவர்களும்,

இணைச்செயலாளர்களாக ஜெசிதா ஆனந்தமூர்த்தி மற்றும் சி.துஷாரன் ஆகியோரும்,

துணைக்குழுவுக்கான உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

புதிய நிர்வாக சபைக் கட்டமைப்புடன் தமிழ் மாமன்றதின் ஆக்கபூர்வமான பணிகளை முன்னரை விட மிகச் சிறப்பாக முன்னெடுக்கவுள்ளதாக நிர்வாகசபையினர் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வவுனியாவில் மட்டுமன்றி மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் தமிழ் மற்றும் கலை இலக்கிய செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக தமிழ் மாமன்றம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மாமன்றத்தின் சேவை மென்மேலும் வளர வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

1 2 3 4 5