கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய 20 ஆண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் 24.10.2015 சனிக்கிழமை கண்டி திருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
அகில இலங்கை ரீதியில் கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய ஆக்க இலக்கியப் போட்டியில் வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ். தர்மினி பத்மநாதன் கட்டுரைப் போட்டியில் தங்கப் பதக்கத்தினையும் , நாடகப் பிரதியாக்கப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுள்ளார்.
இன் நிகழ்வில் கல்வி ராஜாங்க அமைசர். ராதாகிருஸ்ணன், உடுவை தில்லைநடராஜா, பேரா.துறை மனோகரன், கலாபூசணம் அகிலம் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.