லிபியா கடற்கரையில் 40 சடலங்கள் : தொடரும் அகதிகளின் சோகம்!!

709

libiya

சஹாரா துணைகண்டத்தில் உள்ள ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 70 அகதிகளை ஏற்றிவந்த படகு லிபியா நாட்டின் கடல் எல்லையில் நேற்று கவிழ்ந்து, மூழ்கியுள்ளது.

குளிர்ந்த கடல்நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்த 40 பேரின் சடலங்கள், லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியின் கிழக்கேயுள்ள ஸ்லிட்டன், கோம்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செம்பிறை தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், மீதமுள்ள 30 பேரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.