10 வருடங்களின் பின்னர் ஒஸ்ரியா மற்றும் இலங்கைக்கு இடையில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி வியன்னா நகரில் இருந்து விமானம் ஒன்று இன்று காலை 07.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விமானத்தில் 125 பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
முதற் கட்டமாக வாரத்திற்கு ஒரு விமானம் வியன்னாவில் இருந்து கட்டுநாயக்கவுக்கும் கட்டுநாயக்கவில் இருந்து வியன்னாவுக்கும் பயணிக்கவுள்ளது.
மேலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையில் வாரத்தில் மூன்று தடவைகள் விமான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒஸ்ரியா விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.