வவுனியா நெடுங்கேணி ஒலுமடு அ.த.க.பாடசாலையில் தரம்ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கௌரவிக்கும்நிகழ்வு அதிபர் திரு.விமலேந்திரன் தலைமையில் நேற்று (28.10.2015) நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான மயில்வகனம்.தியாகரசா, M.P.நடராஜ், G.T.லிங்கநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் வவுனியா வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் வேலு கிருபானந்தம், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் சுந்தரலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கௌரவித்தனர்.
இன் நிகழ்வில், ஆசிரியர்கள் மற்றும் படசாலை அபிவிருத்திக்குழு அங்கத்தவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் பழையமணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.













