பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் குமார் சங்கக்கார!!

461

Sangakaara

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டியில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்­பவான் குமார் சங்­கக்­கார விளை­யாட உள்ளார்.

ஐ.பி.எல். பாணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை­யினால் நடத்தப்­படும் பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டியின் முதல் தொடர் அடுத்த வருடம் பெப்­ர­வரி 4 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை துபாய் மற்றும் சார்­ஜாவில் நடக்­க­வுள்­ளது.

இதில் விளை­யாட பல்­வேறு நாடு­களை சேர்ந்த 150இற்கும் மேற்­பட்ட வீரர்கள் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் இலங்கை அணியின் முன்னாள் தலை­வரும் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரு­மான குமார் சங்­கக்­கார பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டி­களில் விளை­யாட உள்ளார்.

சங்­கக்­கார உலக தரம் வாய்ந்த வீரர். அவரை பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டிக்கு வர­வேற்­பதில் மிகுந்த மகிழ்ச்­சி­ய­டை­கிறோம் என்று அந்த தொடரின் தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ளார்.