ஆபிரிக்காவில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் 2013–ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இராணுவத்தினரும், தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பல பகுதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இரு தரப்புக்கும் நடந்த சண்டையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 20 இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். அங்கு நடக்கும் சம்பவம் தொடர்பாக ஆப்பிரிக்க யூனியன் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அறிக்கை இப்போது தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தீவிரவாதிகளுக்கும், இராணுவ படையினரும் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பினருமே பெண்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
தீவிரவாதிகள் தங்கள் எதிரிகளை கொன்று அவர்களுடைய இரத்தத்தை பொதுமக்களை வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளனர். மேலும் கொல்லப்பட்டவர்களை தீயில் சுட்டு அவர்களுடைய இறைச்சியை மக்களை கட்டாயமாக சாப்பிட செய்துள்ளனர். இது போன்று மிக மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





