தாய்லாந்தில் பஸ் விபத்து : 22 இலங்கையர்கள் காயம்!!

992

தாய்லாந்தில் பஸ் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 22 இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தின் நோன்பொஹி ரசாபூரி பிரதேசத்தில் இன்று இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பஸ்ஸில் 34 பேர் பயணித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்த வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த சாரதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலோட்டின் வர்த்தக கட்டடத் தொகுதிக்கு சென்ற இலங்கையர்கள் மீண்டும் தாம் தங்கியுள்ள பகுதிக்கு வருகைத் தந்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

1 2