மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் அதர்மானிக் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்த 9-ம் வகுப்பு மாணவி ஒரு பையனை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அந்த மாணவியின் தந்தைக்கு தெரிய வந்து, அவர் கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும், அந்த பையனிடம் உள்ள தொடர்பை கைவிடுமாறு கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி தந்தை அறிவுரையை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை, தனது மகள் என்று கூட பாராமல், மாணவியின் கழுத்தை நெரித்தும் கம்பால் தலையில் பலமாக தாக்கியும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அத்துடன் ஆத்திரம் அடங்காமல் மாணவியின் நாக்கை இழுத்து வைத்து அறுத்துள்ளார்.
இதனால் அந்த மாணவி மயக்கம் அடைந்தார். இரண்டு பேர் துணையுடன் அருகில் உள்ள வயக்காட்டிற்குள் தூக்கி வீசிவிட்டனர். அந்த பகுதி வழியாக சென்றவர்கள் மாணவி மயங்கி கிடப்பதை பார்த்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.





