
அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகர மேயராக இலங்கைப் பெண் ஒருவர் முதல்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா இரட்ணம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார்.
சமாந்தா, தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து தோ்தலில் வெற்றியீட்டியுள்ளதுடன், இதற்கு முன்னர் இரு தடவைகள் மேயர் பதவிக்காக போட்டியிட்ட போதிலும் வெற்றிபெறவில்லை. இலங்கையில் பிறந்த சமந்தா இரட்ணம், உள்நாட்டு யுத்தம் காரணமாக பெற்றோருடன் கடந்த 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.
வெற்றியைப் பொறுத்தவரை கடந்த இரு வருடங்களைவிட இவ் வருடம் அதிக நம்பிக்கையுடன் இருந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார்.





