வடமாகாண விவசாய அமைச்சின் ஊடாக குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு விதைதானியம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா பயனாளிகளுக்கு விதைதானியங்களை வழங்கி வைத்தார்.
வவுனியா மாவட்ட விவசாயப் பணிப்பாளர், செட்டிகுளம் விவசாயப் போதனாசிரியர், விவசாயத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.






