ஆறு வயதில் பிரிந்த தங்கையை 46 வயதில் சந்தித்த அக்கா!!

472

ggதென் கொரியாவில் தாயின்றி குடிகாரத் தந்தையுடன் வசித்து வந்த சிறுமிகள் இருவரும், தந்தையையும் ரெயில் விபத்தில் இழந்து அனாதையாகினர். பின்னர், இரண்டு வெவ்வேறு குடும்பங்களால், தத்தெடுக்கப்பட்டு இருவரும் அமெரிக்காவிலேயே குடியேறினர். வளர்ப்புப் பெற்றோர் இந்தச் சிறுமிகளுக்கு புதிய பெயரை வைத்துவிட்டனர். ஏதோ ஒரு இரவில் திடீரென விழித்துக்கொண்ட மூத்த சகோதரி போக் நாம் ஷின் தனது சகோதரி யூன் ஷூக் ஷின்னைப் பற்றி தனது வளர்ப்புப் பெற்றோரிடம் தெரிவித்தார்.

அவர்களும் போக்கை தாம் தத்தெடுத்த இல்லத்திற்கு தொடர்புகொண்டு இது தொடர்பாக விசாரித்துப் பார்த்தனர், எனினும், விவரம் ஏதுமில்லை! எப்படியாவது தனது தங்கையை கண்டறிய எண்ணிய போக் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். ஆனால், பலனில்லை! சமீபத்தில் நாற்பது ஆண்டுகள் கழித்து, புளோரிடாவின் மருத்துவமனைக்கு பணிபுரியத் தொடங்கினார் போக் நாம். அதே மருத்துவமனையில் சில மாதங்கள் கழித்து யூன் ஷூக்கும் பணியில் சேர்ந்தார்.
ஒரே நாட்டைச் சேர்ந்த இருவரையும் மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவர் எதேச்சையாக அறிமுகப்படுத்தி வைத்தார். பழகியவுடன் மிகுந்த நட்பாகிவிட்ட இருவரும், தமக்குள் என்ன சம்பந்தம் இருக்கும்? என யோசனை செய்யத் தொடங்கினர். ஒரே நாடு, ஒரே ஊர் என்பதையும் தாண்டி ஒரே தந்தையின் பெயரே இருவருக்கும் இருக்கின்றது என உணர்ந்த சகோதரிகள் கண்ணீர் மல்க ஒருவரையொருவர் அன்பாகத் தழுவிக் கொண்டனர். இதுபோன்ற சம்பவங்களால்தான் விதியைக்கூட அவ்வப்போது நம்ப வேண்டியிருக்கின்றது!