
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறிக்கு பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு இணையான அந்தஸ்தினை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று அறிவித்தார்.
இம் மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அரசியல் தூண்டுதல் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் மீது பொலிஸார் முன்னெடுத்த தாக்குதல் நடவடிக்கை தொடர்பில் விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதற்கு பதிலளித்த போதே சபை முத ல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தனது உரையில்,
1990 ஆம் ஆண்டு 46/90 இன் கீழ் சுற்று நிருபத்தினூடாக உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறிக்கு பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கான அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், கடந்த மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு இந்த சுற்றுநிருபம் இரத்து செய்யப்பட்டது.
இப் பாடநெறிக்கு பட்டப்படிப்பு அந்தஸ்து வழங்கக் கோரியே கடந்த 29 ஆம் திகதி அம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் 46/90 ஆம் இலக்க சுற்றுநிரூபத்தை மீண்டும் அமுல்படுத்தவும் அதனை பலப்படுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே மாணவர்கள் ஆர்ப் பாட்டத்தை நடத்தியுள்ளனர். இவ் ஆர்ப்பா ட்டத்தை ஏற்பாடு செய்ததன் பின்னணியில் அரசியல் தூண்டுதல்கள் உள்ளதெனவும் சந்தேகிக்கின்றோம்.
இலவசக் கல்வியை இந் நாட்டுக்கு அறிமுகப்படுத்திய ஐ.தே.கட்சி தொடர்ந்தும் அதனை முன்னெடு த்து செல்லும். அதன டிப்படையில் நாம் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டை நான்கு மடங்காக அதிகரிக்கவுள்ளோம்.
மாணவர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதில் எமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை. சிவில் சட்டத்தை மீறாமல் பேச்சுவார்த்தைகளுக்கு வருவதற்கு மாணவர்கள் தயாரென்றால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நானும் பிரதமரும் தயாராகவே உள்ளோம்.அதைவிடுத்து அரசாங்கத்தை அச்சுறுத்தி சிவில் சட்டங்களை மீறி மாணவர்கள் அவ ர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது என்றும் அமைச்சர் கிரியெல்ல தெரிவித்தார்.





