கொடிய விஷப் பாம்மை கடித்துக் கொன்ற ஒன்றரை வயது குழந்தை!!

696

2007559263Worldபிரேசிலில் ஒன்றரை வயது குழந்தை கொடிய விஷப்பாம்பு ஒன்றை கடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தை வீட்டின் அருகில் உள்ள புற்தரையில் விளையாடிக் கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்தக் குழந்தை பாம்பை விளையாட்டுப் பொருளாக நினைத்து கடித்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. குழந்தைக்கு உணவு எடுத்து வருவதற்காக வீட்டினுள் சென்ற தாய் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையின் கை மற்றும் வாயில் இரத்தம் இருந்துள்ளதுடன் அருகில் இந்த விஷப்பாம்பும் இறந்து கிடந்துள்ளது.

உடனடியாக இறந்து கிடந்த பாம்பையும் எடுத்துக் கொண்டு மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதை தெரிவித்துள்ளனர்.