சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினிகாந்த் தான் நம் நினைவுக்கு வருவார். இந்நிலையில் தென்னிந்தியாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்றால், வட இந்தியாவில் அமிதாப் பச்சன் தான் சூப்பர் ஸ்டார்.இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
ஆனால், ரஜினி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தப்பின் அமிதாப்புடன் இணைந்து நடித்ததே இல்லை.சிவாஜி படத்தில் அமிதாப்பை நடிக்க வைக்க முயற்சி செய்து தோல்வியில் முடிந்தது. தற்போது வந்த தகவலின்படி எந்திரன்-2ம் பாகத்தில் அமிதாப் நடிக்க சம்மதித்துள்ளார் என கூறப்படுகின்றது.




