20 ஆண்டுகளுக்கு பிறகு சுத்தம் செய்யப்படவிருக்கும் பிரபல சூயிங்கம் சுவர்!!

1010

2110446643Untitled-1

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டல் நகரின் ‘பைக் ப்லேஸ் மார்கெட்’-டின் பிரபலமான பகுதியாக ‘சூயிங் கம் சுவர்’ விளங்கி வருகின்றது.இந்த சுவர் கடந்த இருபது ஆண்டுகளாக இவ்வழியே வந்துசெல்லும் மக்கள் மென்று ஒட்டிய சூயிங் கம்களால் நிரம்பி வழிகின்றது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்தப் பழமையான அங்காடியின் பிரபலமான அங்கமாக விளங்கும் இந்த சுவரை பாதுகாக்கும் முயற்சியில் அதில் ஒட்டியுள்ள எச்சில் சூயிங்கமின் மிச்சங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்படவுள்ளது.

இந்த சுவர் சுமார் ஆறு அங்குல அளவுள்ள, பத்து இலட்சத்துக்கும் அதிகமான ‘சூயிங் கம்களை’ தாங்கி நின்றுகொண்டிருக்கின்றது. இந்த சுவர் இம்மாதம் பத்தாம் திகதி முதல் சுத்தம் செய்யப்பட இருக்கின்றது. இந்தச் சுவரைச் சுத்தம் செய்ய சுமார் நான்கு நாட்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகிலேயே அருவருக்கத்தக்கதாக கருதப்படும், இந்தப் பிரபல சுவரை, இழக்கப் போவதை எண்ணி மக்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர். டுவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்களில், இந்தச் சுவருடன் புகைப்படமெடுத்து பலரும் பகிர்ந்து வருகின்றனர்.