
மட்டக்களப்பு – ஐயங்கேணி காட்டுப் பகுதிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செங்கலடி – ரமேஸ்புரத்தை சேர்ந்த ஆசிரியரான அழகையா அச்சுதன் (41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐயங்கேணி மயானத்திற்கு பின் பகுதியில் காணப்படும் காட்டுப் பகுதிக்குள் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே இவரது சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
இவர் வாகரை பகுதி பாடசாலை ஒன்றில் சித்திரப் பாட ஆசிரியராக உள்ளதோடு, ஆலயம் போன்ற இடங்களில் ஓவியங்கள் வரையும் ஒருவருமாகும்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




