காதலனோடு தலைமறைவான பெண் கல்லெறிந்து கொலைசெய்யப்பட்ட பரிதாபம்!!

673

woman_0

காத­ல­னுடன் தலை­ம­றை­வான பெண்­ணொ­ருவர் அடித்துக் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஆப்கானிஸ்தானில் ஆர்ப்­பாட்டமோன்று இடம்­பெற்றுள்­ளது.

ஆப்கான் நாட்டில் கோர் பகு­தியை அடுத்­துள்ள மலைப்­பி­ர­தே­ச­மான ஹெலிம் கிரா­மப்­ப­கு­தியில் வசித்து வந்த ரொ­க் ஷானா என்ற இளம்­பெண்­ணுக்கு வயது முதிர்ந்த நப­ருடன் திரு­மணம் செய்ய ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த திரு­மணம் பிடிக்­காத குறித்த பெண், தான் காத­லித்து வந்த இளை­ஞ­னுடன் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். இத­னை­ய­டுத்து, அந்த இளம்­பெண்ணை தேடிக் கண்டுபிடித்து வந்த தலி­பான்கள் அவரை கழுத்­த­ளவு குழிக்குள் புதைத்து கல்லால் அடித்து கொலை செய்­துள்­ளனர்.

இது­தொ­டர்­பான வீடியோ இணை­ய­த­ளங்­களில் பரவி மக்கள் மத்­தியில் அதிர்ச்­சியை ஏற்படுத்தியது. இந்த சம்­பவம் இஸ்­லா­மிய மதத்­திற்கு முர­ணா­னது என்றும் குற்­றச்­செயல் எனவும் ஜனா­தி­பதி அஷ்ரப் கானி கண்­டித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில், இந்த சம்­ப­வத்தை கண்­டித்து காபூலில் ஆர்ப்­பாட்டம் ஒன்று நடந்­துள்­ளது. அதில் பெரு­ம­ளவு பெண்­களும் கலந்­து­கொண்­டுள்­ளனர். இந்த கல்­லெ­றிந்து கொல்லும் தண்­ட­னையை ஏற்­பாடு செய்த தலி­பான்­க­ளையும், அர­சாங்­கத்­தையும் கண்­டித்து அங்கிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும், சிலர் போலி இரத்தம் தோய்ந்த ஆடையை அணிந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.