
இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கடைசி மற்றும் 2வது டி20 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்துள்ளது.
இந்நிலையில் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியிலும் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் 2வது டி20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடக்கிறது
இதில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி உள்ளது.
அதே சமயம் இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகளை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 3-0 என வயிட்வாஷ் செய்ய காத்திருக்கிறது இலங்கை அணி.
இதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும். இன்றைய போட்டி இலங்கைக்கு அதிரடி வெற்றியா அல்லது மேற்கிந்திய தீவுகளுக்கு ஆறுதல் வெற்றியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





