வவுனியாவில் பஸ்ஸிலிருந்து பாடசாலை மாணவிகள் வெளியில் தள்ளப்பட்ட கொடூரம்!!

861

vavuniya

பாடசாலை மாணவிகள் ஏழு பேர் நடத்துனரால் பேரூந்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

யாழிலிருந்து -திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வவுனியா பஸ் தரிப்பிடத்தில் தரித்து நின்றபோது பஸ்ஸின் உள்ளே ஏறிய மாணவிகள் 7 பேரே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

நேற்று (11.11.2015) காலை வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்திலேயே இச்சம்பவம் நடைபெற்றதாக இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளரொருவர் தெரிவித்துள்ளார்.

பேரூந்தில் சனநெரிசல் அதிகமாக உள்ளதாகக் கூறியே நடத்துனர் இவ்வாறு மாணவர்களை தள்ளியுள்ளார். இதன்போது கீழே விழுந்த சிலர் காயமடைந்துமுள்ளனர்.

-நன்றி ஹிரு நியூஸ்-