எட்டு வருடங்கள் கழித்து 36 வயதினிலே படம் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியவர் ஜோதிகா. அந்த படத்தில் வீட்டு மாடிகளில் தோட்டம் வளர்ப்பது பற்றி முக்கியமாக கூறியிருப்பார்கள்.
தற்போது படத்தில் இடம்பெற்றதை போலவே நிஜத்தில் நடைமுறைக்கு வர இருக்கிறது. அதாவது சென்னையில் உள்ள ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் 36 வயதினிலே படக்குழுவினரை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளது.




