அமெரிக்கா கலிபோர்னியா பிராந்தியத்தில் உள்ள, 8 வாரக் கன்றாக சாகயிருந்த கோலியாத் என்ற கன்றுக்குட்டியை ஷாலே ஹப்ஸ் (17) என்கிற பாடசாலை மாணவி காப்பாற்றியுள்ளார்.
பலவீனமான நிலையில் இருந்த கோலியாத், ஷாலேவின் பாதுகாப்பில் அவளது வீட்டிலேயே வளர்ந்து வருகின்றார். ஷாலே, ஏற்கனவே தனது வீட்டில் 3 நாய்களையும் வளர்த்து வருகின்றார். அந்த நாய்களுடன் சகஜமாக பழகிவரும் கோலியாத், அவர்களது உணவை உட்கொள்வதும் அவர்களது பாத்திரத்திலேயே தண்ணீர் அருந்துவதும் என தன்னையும் ஒரு நாய் இனமாகவே நினைத்து வருகின்றது.
சமீபத்தில் ஒருநாள், ஷாலேயின் குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில், மற்ற நாய்களைப் போல கோலியாத்தும், வீட்டின் சோபாவில் அமர்ந்துகொண்டது.
ஷாலே, கோலியாத் சோபாவில் அமர்ந்திருந்ததைப் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.இப்போது, 50 000 இற்கும் மேற்பட்டோரின் செல்லமாக கோலியாத் மாறிவிட்டது





