
நாட்டில் பெய்து வரும் கனமழைக் காரணமாக வடக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உட்பட பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களான கனமழைப் பெய்து வருகிறது.
இதனால், முல்லைத்தீவு மாவட்டத்தில் 575 குடும்பங்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும்,
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 800 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கில் பல வீதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் ஆயிரத்து 251 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.





