
வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் ஒரே இரவில் நான்கு இடங்களில் திருட்டு இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இரு கடைகள், இரு வீடுகள் என்பன உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.
முனியப்பர் கோவிலடியில் கடை ஒன்றும், ரகுபாக்கத்தில் வீடு, கடை என்பனவும், உக்கிளாங்குளம் மில் வீதியில் வீடு ஒன்றும் உடைக்டகப்பட்டு திருடப்பட்டுள்ளது.
இங்கிருந்து சுமார் 300,000 ரூபாய் பெறுமதியான நகைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
-நன்றி அதிரடி-





