மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம்!!

442

Ravi_karunanayake2பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் உதவ எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அடித்தளமிடுவதும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என ரவி கருணாநாயக்க மேலும் கூறியுள்ளார்.