மக்களின் வாழ்க்கைச்சுமையை குறைக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் அமையும்!!

423

budget tanதேசிய அர­சாங்­கத்தின் கீழ் நாளைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு – செலவுத் திட்­டத்தில் மக்­க­ளுக்கு தேவை­யான பத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­கான சலு­கைகள் உள்­ள­டங்­க­லாக மக்­களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் திட்­டங்கள் முன்வைக்­கப்­படும் என்று அமைச்சர் சரத் அமு­னு­கம தெரி­வித்தார்.

நாட்டின் நீண்­டக்­கால பொரு­ளா­தார ஸ்திர­தன்­மைக்கும் அர­சாங்­கத்தின் அன்­றாட செயற்­பா­டுகள் உட்­பட்ட ஏனைய தேவை­க­ளுக்கும் சதா­ரண மக்­களை பாதிக்­கா­த­வாறு முறை­யான வரி அற­வீ­டா­னது அவ­சியம் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார்.

கொழும்பில் அமைந்­துள்ள ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன் போது அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

பல்­வேறு எதிர்­பார்ப்­பு­களின் மத்­தியில் ஸ்தாபிக்­கப்­பட்ட தேசிய அர­சாங்­கத்தின் அடுத்த ஆண்­டுக்­கான வரவு செலவு திட்­ட­மா­னது நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினால் நாளைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இவ்­வா­றான நிலையில் இம்­முறை தேசிய அர­சாங்­கத்­தினால் சமர்ப்­பிக்­கப்­படும் வரவு செலவு திட்­ட­மா­னது பல்­வேறு பொரு­ளியல் அறி­ஞர்கள் மற்றும் பல்­வேறு கட்­சி­களின் பிர­தி­நி­திகள் உட்­பட மக்­களின் யோச­னைக்­க­மை­யவே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில் நாளைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு செல­வு­திட்­டத்தில் மக்­களின் வாழ்கை சுமையை குறைக்கும் யோச­னைகள் உள்­ள­டங்­க­ளாக மக்­க­ளுக்கு தேவை­யான பத்து அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்­கான சலு­கை­களும் வழங்­கப்­பட்­டுள்­ள­தோடு தனி­நபர் வரு­மா­னத்தை அதி­க­ரிக்கும் செயற்­றிட்­டங்­களும் உள்­ள­டக்­க­பட்­டுள்­ளது.

ஒரு நாட்டின் நீண்­டக்­கால பொரு­ளா­தார செயற்­பா­டு­க­ளுக்கு உள்­நாட்டு உற்­பத்­திகள் மற்றும் ஏற்­று­ம­திகள் மிகவும் அவ­சி­ய­மா­னது அந்­த­வ­கையில் இந்த வரவு செலவு திட்­டத்தில் மேற்­கண்­ட­வ­றான விட­யங்­க­ளுக்கு அதி­க­ள­வான முக்­கி­ய­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே ஒரு அர­சாங்­கத்தின் நீண்­ட­கால செயற்­றிட்­டங்­க­ளுக்கும் அர­சாங்­கத்தின் அன்­றாட செயற்­பா­டு­க­ளுக்கும் வரி வரு­மா­ன­மா­னது மிகவும் அவ­சி­ய­மா­னது. மறு­புறம் மக்­களும் வரி வரு­மா­னத்தை உரிய முறையில் செலுத்­து­வ­தற்­கான சந்­தர்ப்­பத்­தையும் ஏற்­ப­டுத்தி கொடுக்க வேண்டும்.

எனவே ஒரு அரசின் வரி அற­வீ­டா­னது அந்­நாட்டின் சாதா­ரண மக்­களை பாதிக்க கூடாது. அந்­த­வ­கை­யி­லேயே எமது புதிய வரவு செலவு திட்­டத்­திலும் வரி வரு­மானம் உள்ளிட்ட யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனவே ஒரு நாட்டின் நீண்டக்கால பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான கல்வி, சுகாதாரம், கிராமிய அபிவிருத்தி உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தேசிய அரசாங்கத்தின் புதிய வரவு செலவு திட்டம் பெரும் அளவு பங்களிப்பு செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.