30வது பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் பறந்த தனுஷ்!

346

danush

நாளை தனுஷுக்கு 30வயது. இந்த பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் பறந்துவிட்டார் தனது நெருங்கிய நண்பர்களுடன் தனுஷ். தனுஷைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மறக்க முடியாதது.

அவரது முதல் இந்திப் படம் ராஞ்ஜனா பெரும் வெற்றி பெற்று 100 கோடியை அள்ளியுள்ளது. மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்துக்காக 2 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். மரியான் படம் தமிழில் சரியாகப் போகவில்லை என்றாலும் அவர் நடிப்புக்கு ஏக பாராட்டுகள்.

எனவே மிக சந்தோஷமாக இந்த பிறந்த நாளை அவர் கொண்டாடுகிறார். தனுஷுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரும் செல்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத்தும் அவர்களுடன் பின்னர் கலந்து கொள்கிறார்.

வணக்கம் சென்னை படத்தின் பாடல் வெளியீடு சனிக்கிழமை முடிந்ததும் அன்று மாலை லண்டன் புறப்படுகிறார் அனிருத்.