வவுனியா கோவில் குளத்தில் இருகடைகளில் திருட்டு!!

507

௧௨

வவுனியா கோவில் குளம் முதலாம் ஒழுங்கையில் பாலகிருஸ்ணன் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான கடையினுள் புகுந்த திருடர்கள் 21000 ரூபாய் ரொக்க  பணத்தினை திருடி சென்றுள்ளனர்.
அத்துடன் கோவில்குளம் செபஸ்தியார் கோவில் வீதியில் அமைந்துள்ள முத்துக்கிருஷ்னன் சிவராசா என்பவருக்கு சொந்தமான வியாபார நிலையத்தில் இருந்தும் 15000 ரூபா ரொக்க  பணம் திருடப்பட்டுள்ளது.
இவ்வியாபார நிலையங்களின்  கூரையினை (சீற்) கழற்றி உள்ளிறங்கியே இத்திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபகாலமாக கோவில்குள பிரதேசத்தில் பல திருட்டுச்சம்பவம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.