பொகவந்தலாவை – டியன்சின் நகரில் இன்று அதிகாலை 6 வர்த்தக நிலையங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த கொள்ளை சம்பவத்தை கண்ட வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் சத்தமிட்டதை அடுத்து திருடர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இரண்டு தங்க விற்பனை நிலையங்களும், ஒரு புடவைகடையும், மூன்று பலசரக்கு கடைகளும் இவ்வாறு இனம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதில் ஒரு பலசரக்கு கடையில் மாத்திரம் 86000 ரூபா பணமும். மற்றுமொரு தங்க நகை விற்பனை நிலையத்தில் 1 இலட்சம் ரூபா பெறுமதியான வெள்ளி நகைகள் திருடப்பட்டதாக பலசரக்கு கடை உரிமையாளரும், நகைகடையின் உரிமையாளரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





