காத்திருத்தலின் வலி, வேதனைகளோடும், தங்க மீன்கள் படத்தோடும் மூன்று வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்.
படம் எடுக்கணும் கோடம்பாக்கத்தில் கால் பதிக்கணும் கண்கள் முழுக்கக் கனவுகளோடு வலம் வருகிறார்கள் பல இளைஞர்கள். படம் எடுப்பதற்கு முன் படுகிற அதே அவஸ்தையை வலியை படம் ரிலீஸ் பண்ணுவதற்காகவும் அனுபவிக்க வேண்டியிருப்பதுதான் வேதனை.
மரியான், பட்டத்து யானை படங்களை அடுத்து தலைவா படத்தின் ரிலீஸை ரசிகர்கள் எதிர்பார்ப்பதற்கும், சினிமா உலகம் எதிர்பார்ப்பதற்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக 20 தமிழ்ப் படங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன. போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் பட்சத்தில் 20 படங்களும் ஓகஸ்டு மாதத்திலேயே வெளியாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
555, ஆதலால் காதல் செய்வீர், அடித்தளம், நேற்று இன்று, தங்கமீன்கள், கோப்பெருந்தேவி, மூடர் கூடம், மாதவனும் மலர்விழியும், விடியும் வரை பேசு, நெடுஞ்சாலை, சுட்டகதை, சும்மா நச்சுனு இருக்கு, சுவடுகள், ஓசூர் ஆன்லைன்.காம், மத்தாப்பு, முத்துநகரம், அச்சம்தவிர், கலவரம், வெண்ணிலா வீடு, மேகா படங்கள் தான் அவை.
சின்னதும் பெரியதுமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படங்களின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே சென்றால் இதுதான் வாழ்க்கை என நம்பி காத்துக்கொண்டிருப்பவர்களின் கதி என்னாகும்.