தொடர் கனமழையால் பூமியில் இறங்கிய அடுக்குமாடி குடியிருப்பு:சென்னையில் பரபரப்பு!!

341

courtyard_hygrevar_apartment_for_sale_at_mahindra_city_chennai_2930076446929775448சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடர் கனமழை காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 9ம் திகதி முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் தாழ்வான பகுதிகளும், புறநகரும் நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் உள்ளே புகுந்துள்ளன.லஸ் சர்ச் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தரைத்தளத்தில் தண்ணீரை சேமித்து வைக்க கட்டப்பட்ட தொட்டி திடீரென பூமிக்குள் புதைந்துள்ளது.

பின்னர் அதிகாலை 3 மணி அளவில் தண்ணீர் சேமிப்பு தொட்டிக்கு மேலே கட்டிடத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்துள்ளது.இதையடுத்து குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

தகவல் அறிந்து சென்ற பொலிசார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்துள்ளனர்.ஆழ்வார்ப்பேட்டையில் குடியிருப்பு புதைந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.