இடுப்பு வலியால் அவதியுறும் ஸ்டெயின்: தென் ஆப்பிரிக்க அணியில் களமிறங்கிய டி லங்க்!!

419

dlunk_002டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, தென் ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்சந்த் டி லங்க் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஸ்டெயின் காயமடைந்தார், இடுப்புவலி மிகுதியால் அவரால் 2 வது டெஸ்ட்டில் விளையாட இயலவில்லை.

இந்நிலையில், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்சந்த் டி லங்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

‘‘மார்சந்த் டி லங்கின் மிகப்பெரிய பலமே வேகமாக பந்து வீசும் திறன் தான். தொடக்கத்திலேயே அவர் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்தால் அது அணிக்கு அனுகூலமாக இருக்கும். அவரால் மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீச முடியும்.’’என்று தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ கூறியுள்ளார்.