46 பந்துகளில் சதம். பாகிஸ்தான்- இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்!!

428

eng_wins_odi_003பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜோஸ் பட்லர் 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.துபாயில் நேற்று பாகிஸ்தான் – இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு போட்டியாக நடந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 117 பந்துகளில் 102 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர், பாகிஸ்தானின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து 46 பந்துகளில் தனது 3-வது சதத்தை எட்டி சாதனை படைத்துள்ளார்.
இது தான் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில், இங்கிலாந்து வீரர் ஒருவரின் அதிவேக சதமாகும்.

இதற்கு முன்பும் 61 பந்துகளில் இலங்கைக்கு எதிராக சதமடித்தும், 66 பந்துகளில் நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்தும் இவரே இந்த சாதனை பட்டியலில் இருந்துள்ளார். தற்போது மீண்டும் அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 355 ஓட்டங்கள் எடுத்துள்ளது.355 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து அணி எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

ஜோஸ் பட்லர் 116 ரன்களுடன் (52 பந்து, 10 பவுண்டரி, 8 சிக்சர்) களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி 3-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை இழந்துள்ளது.