தொலைபேசி, நீர், மின்சாரம் ஆகியவற்றின் கட்டணம் அதிகரிக்கும்?

665

EB

வரவு செலவுத்திட்டத்தில் வட் வரி உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக இறைவரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 11 வீதமாக காணப்படுகின்ற வட் வரி, புதிய வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக 12.5 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சேவை கட்டணமாக 1.5 வீத அதிகரிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக பதிவாகின்றது.

தொகை மற்றும் சில்லரை வர்த்தகங்களுக்கு வட் வரி அறவிடப்படுவதில்லை எனவும், அந்த பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசிகளுக்கான கட்டணத்தை நேரடியாக அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.